Tuesday, January 18, 2011

Vlc media playerஅதிகமாக அறியப்படாத வசதி

Vlc media player-ல் இருக்கும் இன்னொரு அதிகமாக அறியப்படாத வசதி அதிலிருக்கும் வீடியோ/ஆடியோ கன்வர்டர் (Video/Audio converter). கொடுக்கப்படும் பலவிதமாக வீடியோ அல்லது ஆடியோ ஃபார்மேட் கோப்புகளை நமக்கு தேவையான வீடியோ அல்லது ஆடியோ ஃபார்மேட்டாக மாற்ற அதன் Convert வசதி உதவுகின்றது.

விஎல்சி மீடியா பிளயரை திறந்து அதில் Media-வை கிளிக்செய்து.
அதில் Convert/Save என்பதை தெரிவு செய்யவும்.

இங்கே File சட்டத்தில் Add-ஐ சொடுக்கி உங்கள் கோப்பை அங்கே சேர்த்து விடவும்.

இப்போது கீழே Convert/Save என்பதை சொடுக்கினால் அங்கே ஒரு புதிய Convert எனும் சட்டம் தோன்றும். அங்கே Profile என்பதில் எந்த ஃபார்மேட்டாக மாற்ற வேண்டுமோ அந்த ஃபார்மேட்டை தெரிவுசெய்யவும். பின் Start-யை கிளிக்கினால் உங்கள் வீடியோ தேவையான ஃபார்மேட்டுக்கும் மாற்றப்பட்டு விடும்.

Track Synchronization வசதியையும் இங்கே குறிப்பிட விரும்புகின்றேன். சில சமயங்களில் மூவி பார்க்கும் போது அதன் வீடியோவானது முந்திசென்று ஒலி லேட்டாக வர அது எரிச்சலூட்டிக்கொண்டிருக்கும்.

வீடியோவில் தோன்றும் மனிதர்களின் வாயசைவுக்கு ஒலிக்கும் வார்த்தைகள் ஒத்திருப்பதில்லை. இதை சரிசெய்ய உதவுவது தான் இந்த டிராக் சிங்க் வசதி.Vlc media player-ல் Tools-->Track Synchronization-ல் நொடிகளை கூட்டி குறைத்து ஆடியோவை
வீடியோவுக்கு இணையாக்கி கொண்டுவரலாம். சப்டைட்டில்கள் கூட கட்டுப்பாடின்றி ஓடினால் அவற்றையும் நம் வேகத்துக்கு கொண்டுவர இதில் வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. Download As PDF

0 comments:

Post a Comment