தீடீரென புதுப் புது ஐடியாக்கள் தோன்றுகின்றன, சில மறக்க முடியாத
காட்சிகளை கிளிக் செய்கிறீர்கள், விலைக்கழிவு விளம்பரம் கண்ணில் படுகிறது,
இவற்றை மறக்காமல் இருக்க என்ன செய்யலாம் . நோட் பண்ணிக்கலாம்.
கொஞ்சம்
சோம்பேறிகள் மற்றும் எதற்கும் கணனியே கெதி என்று கிடப்பவர்கள், எவர் நோட்
எனும் அற்புதமான மென்பொருளை பயன்படுத்தலாம். இதுவும் இலவசம் தான்.
இணையப் பக்கத்தை ஸ்கீரின் சாட் எடுத்து அல்லது இணையத்தில் உள்ள படங்களை
கணனியில் உங்களுக்கே தெரியாத ஒரு லொகேசனில் சேமித்து வைத்துவிட்டு பின்னர்
அதை தேவைப்படும் போது தேடி மீண்டும் எடுப்பதற்குள் வாழ்நாள் பாதி
போய்விடும் இது போன்ற பிரச்சனைகளில் தப்ப எடுக்கும் படங்கள் ஸ்கீரின் சாட்
என்பவற்றை எவர் நோட் தானாக கட்சிதமாக சேமித்து வைத்துக்கொண்டு தேவையான
நேரத்தில் இலகுவாக தருகிறது. உங்கள் தகவல்கள் வேறு எவரும் பார்க்காத படி
பாதுகாப்பாகவும் வைக்கப்படும்.
விரும்பினால் நீங்கள்
குறித்துக்கொள்ளும் தகவல்களை tags மூலம் ஒழுங்கு படுத்தி கொள்ளலாம். அல்லது
எவர்நோட்டினால் தகவல்கள் தானாகவும் ஒழுங்கு படுத்தப்படும். இணைப்பு Download As PDF







Sri Lanka Rupee Converter
0 comments:
Post a Comment