பிளாக் வைத்திருக்கும் அனைவரின் பிளாக்கிலும் உள்ள ஒரு வசதி தேடியந்திரம் ஆகும். வாசகர்கள் அவர்களுக்கு தேவையான பதிவை தேடிக்கொள்ள வசதியாக இந்த தேடியந்திரம் உள்ளது.
ஆனால் நம் பிளாக்கில் உள்ள தேடியந்திரங்கள் நம் பதிவை தேடுவதில் சரியாக செயல் படுவதில்லை. நாம் கொடுக்கும் வார்த்தைகள் நம் பதிவின் தலைப்பில் இருந்தால் மட்டுமே நமக்கு காட்டும் அது மட்டுமல்லாமல் நம் பிளாக் பக்கம் முழுவதும் திரும்பவும் லோடு ஆகி முடிவு லிங்க் மட்டும் வராமல் அந்த முழு பதிவே நமக்கு வரும் இதற்கு அதிக நேரம் எடுக்கும் இதை வாசகர்கள் விரும்ப மாட்டார்கள். இதனால் கூகுள் வருவது போலவே நம் பிளாக்கிலும் தேடுதல் முடிவு வந்தால் மிகவும் அருமையாக இருக்கும் அல்லவா.
- அதற்கு இந்த லிங்கில் Google Custom Search க்ளிக் செய்து கூகுள் தளத்திற்கு செல்லுங்கள்.
- உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும் அதில் Name என்ற இடத்தில் உள்ள கட்டத்தில் உங்களுடைய பிளாக் பெயரை கொடுக்கவும்.
- Description என்ற இடத்தில் உங்களுக்கு தேவையென்றால் ஏதாவது கொடுக்கலாம் இல்லை என்றால் விட்டு விடவும்.
- அடுத்து Sites To Search என்ற இடத்தில் உள்ள இடத்தில் உங்களுடைய பிளாக் URL கொடுக்கவும்.
- அடுத்து கீழே உள்ள Next என்பதை க்ளிக் செய்யவும்.
- Next க்ளிக் செய்ததும் உங்களுக்கு அடுத்த விண்டோ ஓபன் ஆகும். அதில் உங்கள் தேடியந்திரத்தின் டிசைன் உங்களுக்கு தேவையானதை தேர்வு செய்து அடுத்து கீழே உள்ள Next என்பதை க்ளிக் செய்யவும்.

- தேவைபட்டால் Customize என்பதை க்ளிக் செய்து நிறங்களை மாற்றி கொள்ளலாம்.
- Next க்ளிக் செய்தவுடன் உங்களுக்கு அதுத விண்டோ வரும் அதில் உங்களுக்கு கோடிங் வந்திருக்கும்.
- அந்த கோடிங்குகளை காப்பி செய்து கொள்ளுங்கள்.
- இப்பொழுது உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள். Dassboard- Design - Add a Gadget - HTML Java/Script சென்று காப்பி செய்த கோடிங்கை பேஸ்ட் செய்யுங்கள்.
- இப்பொழுது SAVE கொடுத்து விடுங்கள். உங்கள் பிளாக்கை திறந்து பாருங்கள் உங்கள் பிளாக்கிற்கு உண்டான தேடியந்திரம் வந்திருக்கும்.
இது லோடு ஆக சற்று நேரம் எடுக்கும் காக்கவும். இப்பொழுது அதில் ஏதோ ஒரு வார்த்தையை கொடுத்து தேடி பாருங்கள் உங்களுக்கான முடிவுகள் நொடியில் வரும் அதுவும் அந்த பக்கம் மறுபடியும் லோடு ஆகாமலே வரும். Download As PDF









Sri Lanka Rupee Converter
0 comments:
Post a Comment