Tuesday, February 22, 2011

உங்களது கீபோர்ட் மற்றும் மவுஸை மற்றவர்களின் உபயோகத்திலிருந்து தடுக்க வேண்டுமா?

நீங்கள் உங்களது கீபோர்ட் மற்றும் மவுஸை பயன்படுத்தாத நேரத்தில், குழந்தைகள் அல்லது ஏனையோர் காரணமில்லாமல் பயன்படுத்துவதில் இருந்து தடுக்க வேண்டுமா?தொடர்ந்து கணனியை பயன்படுத்தி கொண்டிருக்கும் போது, சிறிது நேர இடைவெளியாக அவ்விடத்தை
விட்டு விலகி செல்லும் போது குழந்தைகள் மற்றும் ஏனையோர் தேவையில்லாமல் கணனியின் கீபோட் மற்றும் மவுஸை பயன்படுத்துவதிலிருந்து தடுப்பதற்கு KeyFreeze என்ற மென்பொருள் உதவுகிறது.
இந்த மென்பொருயைப் பயன்படுத்தி உங்கள் கணனியின் கீபோர்ட் மற்றும் மவுஸை தற்காலிகமாக லாக் செய்து வைக்க முடியும்.
இந்த மென்பொருளை தரவிறக்கி நிறுவிய பின், ரன் செய்து லாக் செய்யலாம். மீண்டும் பயன்படுத்த லாக்கை எடுப்பதற்கு Ctrl+Alt+Del –> கீகளுடன் Esc கீயையும் அழுத்திவிட்டால் போதும்.
தரவிறக்க சுட்டி Download As PDF

0 comments:

Post a Comment