நம்முடைய கணினிகளில் பலவிதமான ஃபைல்களை வைத்திருப்போம். அவற்றில் முக்கியமான சிலவற்றை மற்றவர்கள் பார்க்க முடியாதவாறு மறைத்து வைக்க நினைப்போம். அப்படி தேவையான ஃபைல்களை அல்லது ஃபோல்டர்களை எளிதாக மறைப்பது எப்படி? என்று பார்ப்போம்.
இது ஒரு வீடியோ பதிவு. கீழுள்ள வீடியோவில் ஃபைல்களை மறைப்பதற்கான வழிமுறைகளை பார்க்கவும்.
வீடியோவில் சொல்லப்பட்டுள்ள வழிமுறைகள்:
1. மறைக்க நினைக்கும் ஃபைல் அல்லது ஃபோல்டரை Select செய்து Right Click செய்யுங்கள்.
2. அதில் Properties என்பதை கிளிக் செய்யுங்கள்.
3. அங்கே General Tab-ல் Hidden என்னும் சிறிய பெட்டியில் கிளிக் செய்து OK என்பதை கிளிக் செய்யுங்கள்.
தற்போது அந்த ஃபைல் அல்லது ஃபோல்டர் மறைக்கப்பட்டு விடும். மறைக்கப்பட்ட ஃபைல் சில நேரம் மங்கலாக தெரியும். அப்படி தெரிந்தால் பின்வருபவற்றை செய்யுங்கள்.
4. மேலே Menu Bar-ல் Tools => Folder options கிளிக் செய்யுங்கள்.
5. அங்கே View Tab-ஐ கிளிக் செய்யுங்கள்.
6. அங்கே Hidden files and folders என்பதற்கு கீழே Show hidden files, Dont show hidden files என்று இருக்கும்.
Show hidden files - மறைக்கப்பட்ட ஃபைல்கள் மங்கலாக தெரிவதற்கு
Dont show hidden files - மறைக்கப்பட்ட ஃபைல்கள் தெரியாமல் இருப்பதற்கு
இதில் Dont show hidden files என்பதை தேர்வு செய்து OK என்பதை கிளிக் செய்யுங்கள்.
பிறகு நீங்கள் மறைத்த அனைத்து ஃபைல்கள், ஃபோல்டர்களும் யாருக்கும் தெரியாது.
இது எளிமையான வழியாகும். இதில் உள்ள குறைபாடு, இது பற்றி தெரிந்த யாரும் நீங்கள் மறைத்த ஃபைல்களை பார்க்கலாம். ஆனால் பல நேரம் இது பயன்படும்.
Update: மறைத்த ஃபைலை மீண்டும் தெரிய வைப்பதற்கு, ஸ்டெப் 6-ல் உள்ளதில் Show hidden files என்பதை தேர்வு செய்து, ஸ்டெப் 3-ல் செய்த டிக்கை எடுத்துவிடவும். Download As PDF







Sri Lanka Rupee Converter
0 comments:
Post a Comment