கூகிளின் யூடியுப் சேவை (Google Youtube) வீடியோக்களை இலவசமாக கண்டுகளிக்க உதவுகிறது. இந்த இணையதளத்தில் ஏராளமான இலவச வீடியோக்கள் உள்ளன.
வேண்டுமென்றால் நாம் இலவசமாகத் தரவிறக்கிக் கொள்ளலாம். கடந்த வருடமே யூடியுப் தளத்தில் இலவசமாக இந்தித் திரைப்படங்களை முழுவதுமாகப் பார்ப்பதைக் கொண்டு வந்தது. இதற்காக சில திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்திருந்தது.
மேலும் யூடியுப் இணையதளம் ஐபிஎல் போட்டிகளை நேரலையாக ஒளிபரப்பி புகழடைந்தது. இப்போது இத்தளத்தில் புதிய வசதியாக இந்தி மொழியில் சமீபத்திய வெற்றித் திரைப்படங்களை முழுவதும் பார்க்க வழி செய்திருக்கிறது. இனி மேல் புதிய இந்தித் திரைப்படங்களை High Definition உயர்தரத்தில் பார்த்து ரசிக்க முடியும்.வீடியோவின் தரம் அருமையாக உள்ளது. தரவிறக்கமும் செய்துகொள்ள முடியும். இந்த சேவை Youtube BoxOffice என்று அழைக்கப் படுகிறது.
இணைய முகவரி: http://www.youtube.com/boxoffice

இப்போது ரன்வீர் கபூர், அனுஷ்கா சர்மா நடித்த ”Band Baajaa Baaraat” என்ற திரைப்படம் ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் ஒவ்வொரு மாதமும் புதிய வெற்றியடைந்த திரைப்படங்கள் பதிவேற்றப்படும். பழைய படங்கள் மற்றும் முன்னர் சேர்க்கப்பட்டுள்ள படங்களை எப்போதும் போல Bollywood பகுதியிலும் அல்லது இதன் கீழேயே More Videos என்பதைக் கிளிக் செய்தும் பார்த்துக் கொள்ளலாம். தமிழ் படங்களுக்கும் இந்த மாதிரி செய்தால் நன்றாக இருக்கும்.

Download As PDF

Sri Lanka Rupee Converter
0 comments:
Post a Comment