Monday, November 25, 2013

கண்களை காக்க புதிய மென்பொருள்..!

கணினி பயனர்களுக்கு, கணினியின் பாதுகாப்பு எவ்வளவு முக்கியமோ, அதைவிட கோடி மடங்கு முக்கியமானது உடல் நலன் பேணுவது. குறிப்பாக இரவும் பகலும் கணினியையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்கும் கண்களுக்கு அதிக பாதுக்காப்பு கொடுக்க வேண்டியது முக்கியம்.

பல் போனால் சொல்  போச்சு என்பார்கள்.. கண் போனால் இந்த உலகமே போய்விடும்.மாறி மாறி வரும் வெளிச்சத்தையும், கம்ப்யூட்டர் மானிட்டரிலிருந்து  வரும் அதிகளவு ஒளியையும் கண்கள் பார்த்துக்கொண்டே இருப்பதால் விரைவிலே சோர்வடைந்துவிடும்.

சோர்வடைந்த கண்களுக்கு ஓய்வு அளிப்பது முக்கியம். அதை 20-20 பார்முலா என்பார்கள். இதைப் பற்றி பெரும்பாலும் அறிந்திருப்பீர்கள்.

இவ்வாறு கண்களுக்கு ஓய்வளித்தாலும்,மானிட்டரின் ஒளியை மாற்றி அமைப்பதன் மூலம் கண்களைப் பாதுகாத்திட முடியும்.

உதாரணமாக பகல் நேரத்தில் மானிட்டர் திரையின் வெளிச்சம் குறைவாக இருக்கும். அதே இரவு நேரத்தில் மானிட்டர் வெளிச்சம் அதிகமாக இருக்கும். இது கண்களை கண்டிப்பாக பாதிப்புக்கு உள்ளாக்கும். பெரும்பாலானவர்கள் மானிட்டர் வெளிச்சத்தை பகலிலும், இரவிலும் ஒரே அளவிலேயே மாற்றமல் வைத்திருப்போம்.

அவ்வாறு மாற்ற நினைத்தாலும் ஒவ்வொரு முறையும் பகலிலும், இரவிலும் மானிட்டர் திரை வெளிச்சத்தை மாற்றி மாற்றி அமைத்துக்கொண்டிருக்க முடியாது.

தானாகவே மானிட்டர் வெளிச்சம் பகலிலும் இரவிலும் மாற்றிக்கொள்ளக்கூடிய வசதி இருந்தால் கண்களுக்கும் நல்லது. காட்சியும் சிறப்பாக அமையும். இந்த வசதியை ஏற்படுத்திக்கொடுக்கிறது எப்லக்ஸ் என்ற  மென்பொருள்.

இம்மென்பொருள் நீங்கள் பகல் நேரத்தில் பணிபுரிந்தால், அதற்கேற்ற வெளிச்சத்தையும், இரவு நேரத்தில் பணிபுரிந்தால் அதற்கேற்ற வெளிச்சத்தையும் மாற்றிக் கொடுக்கும். வெளிச்ச அமைவை நீங்களே தீர்மானிக்கலாம். அதற்கான வசதியும் இதில் உள்ளது.



மென்பொருளைப் பயன்படுத்தும் முறை: 


முதலில் மென்பொருளைத் தரவிறக்கம் செய்து உங்களுடைய கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள்.
1. Change Setteings  செல்லவும்.
2. Adjust Your Lighting For Day And Night: பகல் மற்றும் இரவில் எந்தளவிற்கு மானிட்டரில் வெளிச்சம் வேண்டும் என்பதைத் தெரிந்தெடுக்கவும்.
3. Set Your Location: இதில் Change என்பதை அழுத்தி, தோன்றும் மேப்பில் உங்களுடைய ஊரை தேர்ந்தெடுங்கள். அல்லது மேலிருக்கும் கட்டத்தில் உங்களுடைய பகுதியின் பெயரை டைப் செய்யுங்கள்.
4. Transition Speed: இந்த வசதியானது மானிட்டரின் வெளிச்சம் மாறும் நேரத்தை சிறிது சிறிதாக கூட்டுவதற்குப் பயன்படுகிறது. (ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மானிட்டரின் வெளிச்சம் திடீரென மாறுவதால் நீங்கள் குழப்பமடைவதை தவிர்க்கவும், கண்களுக்கு ஏற்றவாறு சிறிது சிறுதாக மானிட்டர் வெளிச்சம் குறையச் செய்வதற்கும், அதிகரிக்கச் செய்வதற்கு இந்த வசதி பயன்படும். இதில் உங்களுக்கு ஏற்றவாறு வெளிச்சம் மாறும் நேரத்தை மாற்றி அமைக்கலாம் )

விண்டோஸ் கணினிகளுக்கு மட்டுமல்லாமல், லினக்ஸ், மேக் கணனிகளுக்கும் இந்த மென்பொருள் பதிப்பு உள்ளது. எனவே அனைத்து கணினிப் பயனர்களும் இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

மென்பொருளைத் தரவிறக்கச் : Download 

கண்கள் எவ்வளவு முக்கியம் என்பதை தெரிந்துகொள்ள ஒரு இரண்டு நிமிடம் கண்ணை மூடிக்கொண்டு வழக்கமான வேலைகளைச் செய்துபாருங்கள்...! கண்டிப்பாக கண்களின் அருமை உங்களுக்குத் தெரியும்.

Download As PDF

கம்ப்யூட்டருக்கு சாவி - பென்டிரைவ்

உங்கள் வீட்டின் பூட்டிற்கு சாவி இருப்பதைப் போல...உங்களுடைய காருக்கு சாவி இருப்பதைப் போல. உங்களுடைய பெட்டி, பீரோவின் பாதுகாப்பிற்கு பூட்டு-சாவி இருப்பதைப் போன்று உங்களுடைய கம்ப்யூட்டருக்கும் ஒரு பூட்டுச்சாவி இருந்தால்... நன்றாகத்தானே இருக்கும்.

அந்த சாவி இல்லாமல் கம்ப்யூட்டரை ஓப்பன் செய்யவே முடியாது.

 நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் ஒரு USB பென்டிரைவ் மூலம் இதைச் செய்யலாம்.

பென்டிரைவ் என்பது கோப்புகளை சேமிக்கப் பயன்படும் ஒரு Removable Device. அதை எப்படி சாவியாக பயன்படுத்த முடியும்? என்ற கேள்வி எழுகிறதா?



முடியும் நண்பர்களே..!

இதற்கென இணையத்தில் ஒரு புரோகிராம் இருக்கிறது. அந்த புரோகிராமிற்கு பெயர் பிரிடேட்டர் (Predator). இது முற்றிலும் இலவசமான புரோகிராம்.

இனி உங்களிடம் உள்ள பென்டிரைவை, கம்ப்யூட்டரில் உள்ள USB போர்ட்டில் செருகினால் மட்டுமே உங்களுடைய கம்ப்யூட்டர் பயன்படுத்த முடியும். மற்றவர்கள் பயன்படுத்தவே முடியாது. அப்படியே பயன்படுத்த நினைத்தாலும் அக்சஸ் டினின்ட் (Access denied )அதிலிருந்து எடுத்துவிட்டால் கம்ப்யூட்டரைப் பயன்படுத்த முடியாது?

இந்த புரோகிராமை பயன்படுத்தி உங்களுடை பிளாஷ் டிரைவை  எப்படி கம்ப்யூட்டர் திறவுகோலாகப் பயன்படுத்துவது என்று பார்ப்போம்.


1. Predator Download இந்த புரோகிராமை உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள்.
2. பிரிடேட்டர் மென்பொருள் இயங்கத்தொடங்கியவுடன், உங்களுடைய பென்டிரைவை கம்ப்யூட்டரில் இணைக்கவும்.
3. இணைத்தவுடன் ஒரு டயலாக்ஸ் பாக்ஸ் கிடைக்கும். பாஸ்வேர்ட் அமைத்திட கேட்கும். OK கொடுக்கவும்.
4. அடுத்து Preferences என்ற ஒரு விண்டோ கிடைக்கும். அதில் New Password என்றிருப்பதில் நீங்கள் மட்டும் தெரிந்துகொள்ளக்கூடிய வித்தியாசமான பாஸ்வேர்ட் ஒன்றை கொடுக்கவும்.
5. அடுத்துள்ள ஆல்வேஸ் ரெக்கொயர்ட் (Always Required) என்ற வாசகம் உள்ளதில் டிக் மார்க் ஏற்படுத்துங்கள். (இந்த செட்டிங்கானது நீங்கள் ஒவ்வொரு முறையும் கம்ப்யூட்டரில் பிளாஷ் டிரைவை செருகும்போதும் கம்ப்யூட்டர் பாஸ்வேர்ட் கேட்பதற்காக.)
6. அடுத்துள்ள ஃப்ளாஸ் டிரைவ் என்ற பிரிவில் உங்களுடைய பிளாஸ் டிரைவினைத் தேர்ந்தெடுக்கவும்.
7. இறுதியாக கிரியேட் கீ - Create key என்பதை அழுத்தி ஓ.கே கொடுத்து வெறியேறவும்.

அவ்வளவுதான் முடிந்தது. பிரிகேட்டர் புரோகிராமினை நீங்கள் சரியாக செட் செய்துவிட்டீர்கள். இப்பொழுது டாஸ்க் பாரில் பார்த்தால் பிரிகேட்டர் புரோகிராமின் ஐகான் இருக்கும். அதை அழுத்தினால் ஒரு சில வினாடிகளில் அந்த ஐகான் ஆனது பச்சை நிறத்தில் ஒளிர ஆரம்பிக்கும். பச்சை நிறமாக மாறியதும் பிரிகேட்டர் புரோகிராம் இயங்கத் தொடங்கிவிட்டது என்று புரிந்துகொள்ளுங்கள்.

30 வினாடிகளுக்கு ஒரு முறை பிரிகேட்டர் புரோகிராம் ஃப்ளாஷ் டிரைவ் கம்ப்யூட்டரில் இணைக்கப்பட்டுள்ளதா என சோதனையிடும்.
இணைப்படவில்லை என்றால் உங்களுடைய கம்ப்யூட்டரின் திரையின் வெளிச்சம் குறைந்து இயக்கம் நின்றுவிடும்.

இப்புரோகிராமின் இயக்கத்தை தற்காலிகமாக நிறுத்த டாஸ்க் பாரில் பாஸ் மானிட்டரிங் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

உங்கள் Computer log செய்து இருக்கும்போது யாராவது பயன்படுத்த முயற்சி செய்தால் அதனை நீங்கள் கம்ப்யூட்டர் இயக்குகையில் டாஸ்க் பார் மெனுவில் உள்ள வியூ லாக் (View Log) மூலம் தெரிந்துகொள்ள முடியும்.

நீங்கள் உங்களுடைய கம்ப்யூட்டரில் பணிபுரிந்து முடிக்கும் வரை பென்டிரைவயும் USB Port -ல் இணைந்திருக்க வேண்டும்

இதற்காகவே ஒரு USB Drive வை நீங்கள் தனியாக பயன்படுத்த வேண்டும். அந்த யூ.எஸ்.பி. டிரைவ்தான் உங்கள் கம்ப்யூட்டருக்கு சாவி.

ஒவ்வொரு முறையும் கம்ப்யூட்டரை இயக்க விட்டு, இந்த சாவியை செருகினால்தான் கம்ப்யூட்டர் திறக்கும்.

ஒன்றுக்கும் மேற்பட்ட USB Port-கள் உங்கள் கணினியில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். இந்த சாவி செருகியிருக்கும்போது வேறு ஏதேனும் யூ.எஸ்.பி. டிரைவில் பைல் சேமிக்க வேண்டுமெனில் மாற்று யூ.எஸ்.பி போர்ட் கண்டிப்பாக உங்கள் கம்ப்யூட்டரில் இருக்க வேண்டும்.

முக்கியமான குறிப்பு: பிரிகேட்டர் புரோகிராம் மூலம் செட் செய்த யூஸ்.எஸ்.பி டிரைவை கம்ப்யூட்டரிலிருந்து நீக்கினால் உங்களுடைய கம்ப்யூட்டர் இயக்கத்தை நிறுத்திவிடும் என்பதை மட்டும் நன்றாக நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்...!
Download As PDF