Monday, May 20, 2013

கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க் நிலை அறிய

நம் கம்ப்யூட்டரின் ஹார்ட் ட்ரைவில், பைலை சேவ் செய்கையில், அல்லது புதிய புரோகிராம் ஒன்றை இன்ஸ்டால் செய்கையில், டிஸ்க்கில் உள்ள ட்ரைவில் இடம் பற்றாக்குறையாக உள்ளது என்ற செய்தி நமக்கு அச்சத்தைத் தரலாம். 

அப்படி என்ன நான் அதிகக் கோப்புகளை உருவாக்கி, அல்லது புரோகிராம்களை இன்ஸ்டால் செய்து, ஹார்ட் டிஸ்க்கின் இடத்தைப் பயன்படுத்தி விட்டேன் என ஆச்சரியப்படலாம். 

உடனே ட்ரைவின் ஒவ்வொரு பகுதியாகச் சென்று, எங்கு அதிக இடம் பயன்படுத்தப்பட்டு உள்ளது எனத் தேடித் தேடிப் பார்க்கலாம். உங்களின் இந்த நேரத்தில் உதவத்தான் WinDirStat என்ற புரோகிராம் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கிறது. 

இந்த புரோகிராமினைக் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்வது மிக எளிதாக உள்ளது. இன்ஸ்டால் செய்தவுடன் முதல் முறையாக இயக்கப்படுகையில், கம்ப்யூட்டரில் உள்ள ட்ரைவ்கள் அனைத்தையும் காட்டுகிறது. 

ஒவ்வொன்றாகவோ அல்லது மொத்தமாகவோ தேர்ந்தெடுத்து, இடம் ஏற்கனவே எடுக்கப்பட்டது குறித்தும், காலியாக இருப்பது குறித்தும் அதனை ஆய்வு மேற்கொள்ளச் செய்திடலாம். 

ஆய்வு முடிந்தவுடன் எத்தகைய பைல்கள் உங்களுடைய ஹார்ட் டிஸ்க்கில் அதிக இடம் எடுத்து அமர்ந்துள்ளன என்று வண்ணங்களைக் கொண்டு வேறுபடுத்திக் காட்டப்படும். 

இந்த இடத்திலிருந்தே உங்கள் ஹார்ட் ட்ரைவில் உள்ள பைல்களை நீக்கலாம். அவற்றின் இடம் குறித்து நிர்வகிக்கலாம். இதனைப் பெறhttp://download.cnet.com/WinDirStat/30002248_410614593.html?tag=dropDownForm;productListing என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.
Download As PDF

Sunday, May 19, 2013

வைரஸ் தாக்கிய பென்ட்ரைவிலிருந்து பைல்களை மீட்க எளிய வழி

தற்பொழுது தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ் பிரச்சினை. வெவ்வேறான கணனிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும்பைல்களை பாதிக்கிறது.

இப்படி பாதிக்கும் பொழுதுஉங்கள் பென்ட்ரைவில் உள்ளபைல்கள் மறைக்கப்பட்டுவிடும் கணனியில் பென்டிரைவை
ஓப்பன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது. வெற்றிடமாக இருக்கும். ஆனால் properties சென்று பார்த்தால் பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும். காரணம் நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து வைத்துவிட்டது. பென்டிரைவில் முக்கியமான தவல்கள் ஏதும் இல்லை எனில் Format செய்து பென்டிரைவை திரும்ப பெறலாம். ஆனால் ஏதேனும் முக்கிய மான தகவல்கள் இருந்தால் எப்படி அந்த பைல்களை பத்திரமாக மீண்டும் கொண்டு வருவது என பார்ப்போம்.

இதற்க்கு நீங்கள் எந்த மென்பொருளையும் உங்கள் கணினியில் Install செய்து உபயோகிக்க வேண்டியதில்லை.உங்கள் கணனியிலேயே சுலபமாக செய்து விடலாம். கீழே உள்ள வழிமுறையின் படி கவனமாக செய்து அந்த பைல்களை மீட்டு எடுங்கள்.

1) முதலில் பென்டிரைவை உங்கள் கணினியில் சொருகி கொள்ளுங்கள்.

2) Start ==> Run ==> CMD==> Enter கொடுக்கவும்.

3) இப்பொழுது பென்ட்ரைவ் எந்த ட்ரைவில் உள்ளது என பாருங்கள். My Computer செல்வதன் மூலம் கண்டறியலாம்.

4) உதாரணமாக E: டிரைவில் பென்ட்ரைவ் இருக்கிறது எனவைத்து கொள்வோம் அதற்கு நீங்கள் E: என கொடுத்து Enter அழுத்தவும்.

5) attrib -h -s -r /s /d *.*என டைப் செய்யுங்கள் ஒவ்வொருபகுதிக்கும் Space சரியாககொடுக்கவும்.

◦நீங்கள் சரியாக கொடுத்துஉள்ளீர்கள் என உறுதி செய்து கொண்டு Enter அழுத்துங்கள்.

◦சில வினாடிகள் பொறுத்திருங்கள். இப்பொழுது உங்கள் பென்ட்ரைவ் சோதித்து பாருங்கள் உங்களுடைய பைல்கள் அனைத்தும் திரும்பவும் வந்திருக்கும்.
Download As PDF

Thursday, May 9, 2013

விண்டோஸ் 8 ஷார்ட் கட் கீ தொகுப்புகள்

விண்டோஸ் கீ : தொடக்க நிலையில் உள்ள மெட்ரோ ஸ்டார்ட் ஸ்கிரீன் மற்றும் இறுதியாகப் பயன்படுத்திய அப்ளிகேஷன் புரோகிராம்கள் ஆகிய இரண்டையும் இந்த கீ அழுத்துவதன் மூலம் மாற்றி மாற்றிப் பெறலாம்.

விண் கீ + C: சார்ம்ஸ் பாரினைத் (charms bar) தரும்.
 
விண் கீ +Tab : மெட்ரோ டாஸ்க் பார் கிடைக்கும்.
 
விண் கீ + I: செட்டிங்ஸ் சார்ம் அணுகலாம்.
 
விண் கீ + H:ஷேர் சார்ம் கிடைக்கும்.
 
விண் கீ + K: டிவைசஸ் சார்ம் பெறலாம்.
 
விண் கீ + Q: அப்ளிகேஷன் தேடலுக்கான சர்ச் திரை கிடைக்கும். 
 
விண் கீ + F:பைல்களைத் தேடுவதற்கான தேடல் திரை கிடைக்கும். 
 
விண் கீ + W : செட்டிங்ஸ் மாற்றுவதற்கான தேடல் திரை காட்டப்படும்.
 
விண் கீ + P : செகண்ட் ஸ்கிரீன் பார் கிடைக்கும்.
 
விண் கீ + Z: மெட்ரோ இயங்குகையில் அப்ளிகேஷன் பார் பெற
 
விண் கீ + X:விண்டோஸ் டூல் மெனு பார்க்க
 
விண் கீ +O:ஸ்கிரீன் இயக்க மாற்றத்தை வரையறை செய்திட
 
விண் கீ + .: ஸ்கிரீன் பிரித்தலை வலது பக்கமாகக் கொண்டு செல்ல
 
விண் கீ +Shift + . : ஸ்கிரீன் பிரித்தலை இடது புறமாகக் கொண்டு செல்ல
 
விண் கீ +V: இயக்கத்தில் இருக்கிற அனைத்து டோஸ்ட்ஸ் மற்றும் அறிவிப்புகளைக் (Toasts/Notifications) கொண்டு வர
 
விண் கீ +:இயக்கத்தில் இருக்கிற அனைத்து டோஸ்ட்ஸ் மற்றும் அறிவிப்புகளைப் (Toasts/Notifications) இறுதி நிகழ்விலிருந்து கொண்டு வர
 
விண் கீ + PrtScn: அப்போதைய திரைத் தோற்றத்தினை ஒரு பதிவாக எடுத்து, தானாகவே Pictures folderல் பதிந்து சேமித்து வைக்க. இந்த படங்கள் Screenshot (#) என்ற பெயரில் பைல்களாகப் பதியப்படும். அடைப்புக்குறிகளுக்குள் வரிசை எண் தரப்பட்டிருக்கும்.
 
விண் கீ + Enter : Narrator இயக்கப்படும்.
 
விண் கீ + E: கம்ப்யூட்டர் (மை கம்ப்யூட்டர்) போல்டர் திறக்கப்படும்.
 
விண் கீ + R: ரன் டயலாக் பாக்ஸ் காட்டப்படும்.
 
விண் கீ + U :Ease of Access Center திறக்கப்படும்.
 
விண் கீ + Ctrl + F: Find Computers டயலாக் பாக்ஸ் திறக்கப்டும்.
 
விண் கீ + Pause/Break: System பேஜ் காட்டப்படும்.
 
விண் கீ +1..10: டாஸ்க் பாரில் பின் செய்து வைத்துள்ள புரோகிராம்களை, விண் கீ + உடன் தரப்படும் எண்ணுக்கேற்ப வரிசையிலிருந்து காட்டப்படும். அல்லது இயக்கத் தில் இருக்கும் புரோகிராம்களை, டாஸ்க் பாரில் பின் செய்த வரிசைப்படி எடுத்துக் காட்டும்.
 
விண் கீ + Shift + 1..10: டாஸ்க்பாரில் பின் செய்து வைக்கப்பட்டுள்ள புரோகிராம் வரிசையிலிருந்து இதில் தரப்பட்டுள்ள எண்ணுக்கேற்ப, புரோகிராமின் புதிய இயக்கம் ஒன்றைத் திறக்கும்.
 
விண் கீ + Alt + 1..10:டாஸ்க் பாரில் உள்ள ஜம்ப் லிஸ்ட் பட்டியலில் பின் செய்து வைக்கப்பட்டுள்ள புரோகிராம்களில், கொடுக்கப்படும் எண் படி புரோகிராம் தேர்ந்தெடுக்கப்பட்டு இயக்கப்படும்.
 
விண் கீ + B: நோட்டிபிகேஷன் ஏரியாவில் முதல் புரோகிராமைத் தேர்ந்தெடுக்கும். பின்னர் அம்புக் குறிகளை அழுத்தினால் அதற்கேற்ப சுழற்சி முறையில் காட்டும். எந்த புரோகிராம் வேண்டுமோ அது காட்டப்படுகையில் என்டர் தட்ட, அந்த இயக்கம் காட்டப்படும்.
 
விண் கீ + T: டாஸ்க் பாரில் உள்ள புரோகிராம்களைச் சுழற்சி முறையில் தொட்டுச் செல்லும்.
 
விண் கீ + M: இயக்கத்தில் உள்ள அனைத்து விண்டோக்களும் மினிமைஸ் செய்யப்படும்.
 
விண் கீ + Shift + M: மினிமைஸ் செய்யப்பட்ட அனைத்து விண்டோக்களும் திரைக்கு வரும்.
 
விண் கீ + D: டெஸ்க்டாப் காட்டப்படும்/ மறைக்கப்படும் (அதாவது திறக்கப்பட்டுள்ள விண்டோக்கள் மினிமைஸ் மற்றும் மீள் இயக்கத்திற்குக் கொண்டு வரப்படும்)
 
விண் கீ + L: கம்ப்யூட்டர் லாக் செய்யப்படும்.
 
விண் கீ + Up Arrow: அப்போதைய விண்டோ மேக்ஸிமைஸ் செய்யப்படும்.
 
விண் கீ + Down Arrow: அப்போதைய விண்டோ மினிமைஸ் செய்யப்படும்/ மீளக் கொண்டு வரப்படும்.
 
விண் கீ + Home: அப்போதைய விண்டோ தவிர மற்றவை யாவும் மினிமைஸ் செய்யப் படும்.
 
விண் கீ + Left Arrow: ஸ்கிரீன் இடது பக்கமாக விண்டோ டைல் செய்யப்படும்.
 
விண் கீ + Right Arrow: ஸ்கிரீன் வலது பக்கமாக விண்டோ டைல் செய்யப்படும்.
 
விண் கீ + Shift + Up Arrow: அப்போதைய விண்டோவினை மேலிருந்து கீழாக விரிக்கும்.
 
விண் கீ + Left/Right Arrow: அப்போதைய விண்டோவினை ஒரு மானிட்டரிலிருந்து அடுத்த மானிட்டருக்கு நகர்த்தும்.
 
விண் கீ + F1: Windows Help and Support இயக்கப்படும்.

விண் கீ இணைப்பில்லாத மற்ற ஷார்ட்கட் கீ தொகுப்புகள்
Page Up : முந்தைய மெட்ரோ ஸ்கிரீன் காட்சி யைக் காட்டும்
Page Down : பிந்தைய மெட்ரோ ஸ்கிரீன் காட்சியைக் காட்டும்
Esc: அப்ளிகேஷன் இயக்க முடிவு (charm) முடிக்கப்படும்.
 
Ctrl + Esc: இறுதியாக அணுகிய அப்ளிகேஷன் புரோகிராம் மற்றும் மெட்ரோ ஸ்டார்ட் ஸ்கிரீன் ஆகியவற்றை அடுத்தடுத்து காட்டும்.
 
Ctrl + Mouse scroll wheel: மெட்ரோ ஸ்கிரீனில் Semantic Zoom இயக்கத்தினைக் கொண்டு வரும். 
 
......................................................................................................................................................................
 
Alt + Tab: திறக்கப்பட்டுள்ள விண்டோக்களில் முன்னோக்கிச் செல்லும்.

Alt + F4: அப்போதைய விண்டோ மூடப்படும். டெஸ்க்டாப்பில் ஷட் டவுண் விண்டோ மூடப்படும்.

Alt + Esc: திறந்திருக்கும் புரோகிராம்களைச் சுற்றி வரும். அவை திறக்கப்பட்ட வரிசையில் இது மேற்கொள்ளப்படும்.

Alt + PrtScn: அப்போதைய விண்டோ காட்சி யின் ஸ்கிரீன் ஷாட் எடுக்கப்பட்டு கிளிப் போர்டுக்குக் கொண்டு செல்லப்படும்.

Shift + Insert CD/DVD: ஆட்டோ பிளே அல்லது ஆட்டோ ரன் கிளிக் செய்யப்படாமலேயே சிடி/டிவிடி இயக்கப்படும்.

Shift + Delete: தேர்ந்தெடுக்கப்பட்டது முற்றிலுமாக நீக்கப்படும். ரீசைக்கிள் பின்னுக்குக் கொண்டு செல்லப்படாது.

 
Download As PDF

Pen Drive மூலம் Windows 8/7 ஐ install செய்வது எப்படி?

Pen Drive மூலம் windows 8 / 7 / XP ஐ install செய்வது எப்படி என்று இந்த பதிவின் ஊடாக பார்ப்போம்.இதை செய்ய எத்தனையோ வழிகள் இருந்தாலும் இந்த முறை அனைத்தையும் விட மிக மிக இலகுவானதாக இருக்கும் என நம்புகிறேன்.

ஏன் Pen Drive மூலம் Install பன்ன வேண்டும் என்ற ஒரு கேள்வி உங்கள் மனதில் எழுந்து இருக்கலாம்.இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் இரண்டு  காரணங்களை கூறுகிறேன்.
01.நீங்கள் CD / DVD இல்  OS ஐ install பன்னுவதைவிட மிக மிக வேகமாக Pen Drive மூலம் OS ஐ install பன்ன முடியும்.
02.OS ஐ install பன்னுவதற்கு CD / DVD Drive இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
இப்படி இன்னும் பல காரணங்கள் இருக்கின்றன...அதுவெல்லாம் இங்கு நமக்கு தேவையில்லை!


Windows 8/7/ XP ஐ உங்கள் கணினியில் image file ஆக சேமித்து வைத்து இருந்தால் மிக மிக இலகுவாக அதுவும் ஒரே ஒரு ஸ்டெப்பில் செய்ய முடியும்.அப்படி இல்லாமல் நேரடியாக CD / DVD இல் இருந்து Hard Disk இல் Copy பன்னி வைத்து இருந்தால் இந்த முறையை பின்பற்றுங்கள்.

02.அடுத்து நீங்கள் கணினியில் Copy பன்னி வைத்திருக்கும் (Windows 8 / 7 / XP) File ஐ இதில் Add பன்னுங்கள் அல்லது அதற்குல் இழுத்ததுப்போடுங்கள் பின் Save என்பதை க்ளிக் செய்து விரும்பிய இடத்தில் சேமித்து கொள்ளுங்கள்.




03.சிறிது நேரம் எடுக்கும் காத்திருங்கள்.


04.அடுத்து,Tools >> Create Bootable USB Drive...


05.Source Image File: என்பதில் நீங்கள் சேமித்த File ஐ கொடுக்கவும்.
Destination USB Drive: என்பதில் உங்கள் Pen Drive ஐ தொிவு செய்து விட்டு Start என்பதை க்ளிக் செய்யுங்கள்.




06.சிறிது நேரம் காத்திருங்கள்...



07.அடுத்து Computer ஐ Restart செய்து,  BIOS Settings இற்கு வந்து (Computer தொடங்கும் போது F1 / F2 / F10 / Delete ஆகிய ஏதாவது ஒரு  கீயை அழுத்துவதன் மூலம் பெற முடியும்) Boot Order இல் USB என்பதை தொிவு செய்யுங்கள் (F9 கீயை அழுத்துவதன் மூலம் நேரடியாக Boot Device Option இற்கு செல்ல முடியும்) பின் கணினியை ரீஸ்டார்ட் செய்வதன் மூலம்  உங்கள் Pen Drive மூலம் Windows 8 / 7 / XP ஐ நிறுவிக்கொள்ள முடியும்.

Download As PDF

Hard Disk இனை மென்பொருள் இல்லாமல் Partition செய்வது எப்படி?

C, D ஆகிய Drive இற்கு அதிகளவான இடத்தை கொடுத்து Hard Disk இனை Partition செய்து வைத்திருப்போம் அல்லது செய்து தந்து இருப்பார்கள்.  ஆனால் பின் நமக்கு ஒரு தேவை வரும் போது C, Drive இற்கு இன்னும் அதிகமான இடத்தை கொடுத்து இருக்கலாம் அல்லது C, D ஆகிய Drives மாத்திரமே Computer இல் உள்ளது. C இல் OS (Windows8) உள்ளது D இல் Dataகள் உள்ளது.இப்போது உங்கள் கணினியில் Windows7 போட வேண்டும் என நினைக்கிறீா்கள் அதை எங்கே install செய்வது? போன்ற ஒரு கேள்வி வரலாம்.
C இனுல் பதிந்தால் windows8  அழிந்துவிடும். D இனுல் பதிந்தால் இருக்கிற Data அனைத்தும் அழிந்துவிடும்.இப்படியான சூழ்நிலையில் தீா்வுகான வேண்டும் என்றால் உங்களுடைய Hard Disk ஐ  Partition செய்ய வேண்டும் அதாவது C, D Drive மாதிரி E இன்னும் Drive ஐ உருவாக்க வேண்டும். இதை செய்ய நிறைய மென்பொருள்கள் இருக்கின்றன...மென்பொருள் இல்லாமல் எப்படி செய்வது என்று இந்த பதிவின் ஊடாக பார்ப்போம்.
01.My Computer இல் Right Click செய்து Manage


02.Disk Management
அல்லது Run மூலம் திறந்து கொள்ள... RUN இல்  (Windows Key + R) diskmgmt.msc என்று டைப் செய்யுங்கள்.



03.கூடுதலான இடம் உள்ள Drive மீது Right Click செய்து Shrink Volume...என்பதை க்ளிக் செய்யுங்கள்.



04.பின்னர் தோன்றும் Dialog Box இல் "Enter the amount of space to shrink in MB:" எனும் இடத்தில் நீங்கள் உருவாக்க நினைக்கும் Drive இற்கு எத்தனை GB கொடுக்க நினைக்கிறீா்களோ அதை 1024 இனால் பெருக்கி அந்த இடத்தில் கொடுங்கள்.உதாரணமாக 10GB என்றால் 10240 என்பதை கொடுங்கள்.

05.பின் Unallocated என்று நீங்கள் உருவாக்கிய Drive இருக்கும் அதன் மீது Right Click செய்து New Simple Volume... என்பதை கொடுங்கள்.







06.C, D Drive மாதிரி அதற்கு என்ன எழுத்து கொடுக்க நினைக்கிறீா்களோ அதை கொடுத்துவிட்டு Next






அவ்வளவுதான்...
Download As PDF

இன்டர்நெட் மோடத்தினை UNLOCK செய்வது எப்படி?

நாம் பயன் படுத்தும் இணையச்சேவை வழங்குனர்களின் (Airtel, Reliance, Docomo, Mts, vodafone, Dialog, Mobitel, Hutch, Etisalat) Dongle இதை நாம் வாங்கினால் அவர்களுடைய SIM யை தவிர வேறு எந்த SIM யையும் பாவிக்க இயலாதவாறு தடுத்து வைத்து இருப்பார்கள்.

நாம் வேறு ஒரு நிறுவனத்துடைய SIM இனை Dongle இல் போட்டால் Unlock Code கேட்கும்.அதில் சரியான Code இனை நாம் கொடுத்து விட்டால் அந்த Dongle , Unlock செய்யப்பட்டு விடும்.சரி இந்த Unlock Code இனை எப்படி கண்டுபிடிப்பது?

முதலில் உங்களுடைய Dongle இன் 15 இலக்கத்தை கொண்ட IMEI Number ஐ கண்டுபிடியுங்கள்.இது Dongle இன் பின் புறத்தில் காணப்படும்.இதை அப்படியே Copy செய்து இந்த தளம் சென்றுhttp://www.wintechmobiles.com/tools/huawei-code-calculator/ , உங்களுடைய DONGLE இன் IMEI கொடுத்து CALCULATE கொடுக்கவும்.இப்போது உங்களுடைய Dongle இற்குறிய Unlock Code கிடைக்கும்.

அதை அப்படியே Copy செய்து விட்டு, வேறு ஒரு நிறுவனத்துடைய SIM இனை Dongle இற்குல் போடுங்கள்.உங்களிடம் Unlock Code கேட்கும், அந்த இடத்தில் Paste செய்து கொள்ளுங்கள் Unlock ஆகிவிடும்.
Download As PDF